தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க வேண்டும்-கலெக்டர் பேச்சு


தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க வேண்டும்-கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 24 Jun 2021 1:16 AM IST (Updated: 24 Jun 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.

சிவகங்கை,

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:--
கிராமப்பகுதிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முன் வர வேண்டும். குறிப்பாக, கிராமப்பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, பசுமை வீடு திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்குதல், தெருவிளக்குகள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தலாம்.

விவசாய பணிகள்

 கிராமப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திடவும், தனிநபர் விவசாயப் பணிகளில் அதிகளவு ஆர்வம் காட்டவும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேைல உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு தரிசு நிலங்களை சீரமைத்து விவசாய பணிகளை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் தரிசு நிலங்களில் அதிக அளவு விவசாயம் மேற்கொள்ள முடியும் என்றார்.

Next Story