மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பெண்கள் கைது


மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 7:51 PM GMT (Updated: 2021-06-24T01:21:58+05:30)

மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்

விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவிந்தபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜகுமாரி (வயது 45) மற்றும் மேல தெருவைச் சார்ந்த பூங்கொடி (38) ஆகிய இருவரது வீடுகளிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது இருவரது வீடுகளிலும் விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜகுமாரி, பூங்கொடியை கைது செய்தனர்.


Next Story