விவசாயியை தாக்கிய அண்ணன்-தம்பி மீது வழக்கு
விவசாயியை தாக்கிய அண்ணன்-தம்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள காடுவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 45). விவசாயியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் தங்கராசு மகன்கள் இளங்கோவன், லோகநாதன் ஆகியோருக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில்முருகன் தனது வீட்டின் முன்பு உள்ள குப்பைகளை நேற்று சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது செந்தில் முருகனுக்கும், இளங்கோவனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது செந்தில்முருகனை, இளங்கோவன் மற்றும் அவரது தம்பி லோகநாதன் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்முருகன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் செந்தில்முருகன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அண்ணன்-தம்பி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story