நெல்லையில் நத்தம் விஸ்வநாதன் உருவபொம்மை எரிப்பு
சசிகலாவை பற்றி அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உருவபொம்மையை நெல்லையில் அ.ம.மு.க.வினர் தீ வைத்து எரித்தனர். இதுதொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் நெல்லை மாநகர் மாவட்ட அ.ம.மு.க.வினர் நேற்று பாளையங்கோட்டை பகுதி செயலாளர் ரமேஷ் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே ஒன்றுகூடி நத்தம் விஸ்வநாதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அப்போது திடீரென அவர்கள் நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story