தபால் துறையில் முகவர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்


தபால் துறையில் முகவர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 Jun 2021 2:47 AM IST (Updated: 24 Jun 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

தபால் துறையில் முகவர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என்று கோவில்பட்டி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பாண்டியராஜ் தெரிவித்து உள்ளார்.

தென்காசி:
கோவில்பட்டி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பாண்டியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தபால் துறையில் பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்த பதிவுத்தபால், விரைவு தபால், மணியார்டர் அனுப்புதல், தபால் தலை விற்பனை போன்ற சேவைகளை செய்வதற்கான முகவர்களை கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், கடம்பூர், கயத்தாறு, லட்சுமிபுரம், புதூர், விளாத்திகுளம், சங்கரன்கோவில், கழுகுமலை, புளியங்குடி, சிவகிரி, வாசுதேவநல்லூர், தென்காசி, ஆலங்குளம், ஆய்க்குடி, குற்றாலம், கடையநல்லூர், கீழப்பாவூர், கீழப்புலியூர், கிருஷ்ணாபுரம், பண்பொழி, மேலகரம், பாவூர்சத்திரம், சாம்பவர் வடகரை, செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, வடகரை, வீரகேரளம்புதூர் ஆகிய ஊர்களில் தகுதி வாய்ந்த தலா ஒரு முகவரை 2021-2022-ம் ஆண்டிற்கு நியமிக்க விண்ணப்பங்களை அனுப்பலாம்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டரில் செய்வதற்கு வசதியாக கம்ப்யூட்டர், பிரிண்டர், பார் கோடு ஸ்கேனர் போன்றவற்றை சொந்தமாக வைத்திருக்க வேண்டும். வைப்புத்தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். அஞ்சலக ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முகவரின் அலுவலகம் தபால் அலுவலகங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர், கோவில்பட்டி அஞ்சலக கோட்டம், கோவில்பட்டி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை ஸ்பீட் போஸ்ட் மூலமாகத்தான் அனுப்ப வேண்டும். வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story