சிவகிரியில் ஜமாபந்தி
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது.
சிவகிரி:
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. சங்கரன்கோவில் உதவி கலெக்டர் ஜெ.ஹஸ்ரத் பேகம் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் திருநாவுக்கரசர் முன்னிலை வகித்தார். வாசுதேவநல்லூர் பிர்க்காவுக்கான வரவு செலவு கணக்கு மற்றும் மனுக்கள் தீர்வு காணப்பட்டது. சிவகிரி தாசில்தார் ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், வட்ட வழங்கல் தாசில்தார் திருமலைச்செல்வி, தேசிய நில எடுப்பு தாசில்தார் தெய்வ சுந்தரி, மண்டல துணை தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் சண்முகத்தாய், தேர்தல் துணை தாசில்தார் கருத்தப்பாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) சிவகிரி பிர்க்காவுக்கும், நாளை (வெள்ளிக்கிழமை) கூடலூர் பிர்க்காவுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
Related Tags :
Next Story