சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 472 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 472 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 485 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 472 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 66 பேர், நங்கவள்ளியில் 30 பேர், வீரபாண்டியில் 22 பேர், எடப்பாடியில் 19 பேர், சேலம் ஒன்றியத்தில் 17 பேர், காடையாம்பட்டியில் 16 பேர், தாரமங்கலத்தில் 15 பேர், சங்ககிரியில் 14 பேர், கொளத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில்தலா 12 பேர், மகுடஞ்சாவடியில் 11 பேர், மேச்சேரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், கொங்கணாபுரம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், பனமரத்துப்பட்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், ஏற்காட்டில் 2 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த தலா 14 பேர், ஈரோடு, தர்மபுரியில் இருந்து வந்த தலா 13 பேர், நாமக்கல், மதுரை, திருச்சி, கரூரில் இருந்து வந்த தலா 12 பேர், வேலூர், கோவையில் இருந்து வந்த தலா 10 பேர், திருப்பூரில் இருந்து வந்த 8 பேர், சென்னையில் இருந்து வந்த 7 பேர், திருவண்ணாமலையில் இருந்து வந்த 6 பேர், திருப்பத்தூரில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளன.
மேலும் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 743 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3 ஆயிரத்து 418 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் பெண் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலியாயினர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,416 ஆக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story