பூந்தமல்லி வட்டாரத்தில் எந்திர முறையில் நெல் நடவு பணி தொடக்கம்
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எந்திர நடவு முறையில் நெல் நடவு பணி மேற்கொள்ளப்படுகிறது.
திருவள்ளூர்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தற்போது சொர்ணவாரி பருவத்தில் பூந்தமல்லி வட்டாரத்தில் 1,200 எக்டர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எந்திர நடவு முறையில் நெல் நடவு பணி மேற்கொள்ளப்படுகிறது. நெல் எந்திர நடவு முறையில் இடைவெளியில் நெல் நாற்றுக்கள் வரிசையாக நடப்படுகிறது. இவ்வாறு இடைவெளியில் நடுவதால் பயிர்களுக்கு நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. பூச்சி மற்றும் நோய் பரவுதல் குறைகிறது.
கோனோவீடர் கருவியை முன்னும் பின்னும் பயன்படுத்துவதால் களைகள் மட்கி உரமாகிறது. இதனால் அதிக தூர்கள் வெடித்து விளைச்சல் அதிகமாகிறது என திருவள்ளூர் வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் ஸ்ரீ சங்கரி தெரிவித்தார். அவருடன் வேளாண்மை துணை அலுவலர் தயாகர், உதவி வேளாண் அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story