மும்பையில் இருந்து 5 லட்சத்து 3 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஆலந்தூர்,
தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 31 லட்சத்து 43 ஆயிரத்து 450 தடுப்பூசிகள் வந்து உள்ளன.
ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு 42 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. அதில் 20-ந் தேதி வரை 28 லட்சம் தடுப்பூசிகள் மட்டும் தமிழகத்துக்கு வந்து உள்ளன. மீதமுள்ள தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும், ஜூலை மாதம் தமிழகத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மும்பையில் இருந்து விமானத்தில் 42 பெட்டிகளில் 5 லட்சத்து 3 ஆயிரத்து 210 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் சென்னை வந்தன. அதில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 210 தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கும், 36 ஆயிரம் தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்கும் கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story