மாதாந்திர சலுகை பயண அட்டை; ஜூலை 15 வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி - அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவு


மாதாந்திர சலுகை பயண அட்டை; ஜூலை 15 வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி - அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவு
x
தினத்தந்தி 24 Jun 2021 12:07 PM IST (Updated: 24 Jun 2021 12:30 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மையங்களில 1000 ரூபாய் பஸ் பாஸ் வரும் 26-ஆம் தேதி வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநகர பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு ரூ.1,000 மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனை வைத்து மாதம் முழுவதும் மாநகர பேருந்துகளில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம்.

இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக பொது பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மையங்களில் ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் வரும் 26-ஆம் தேதி வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 ஆம் இருந்த அவகாசம் ஜூன் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்கெனவே பெற்ற ரூ.1000 மாதாந்திர சலுகை கட்டண பாஸை பயன்படுத்தி ஜூலை 15 வரை பஸ்களில் பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Next Story