காரில் மதுபானம் கடத்திய 3 பேர் சிக்கினர்


காரில் மதுபானம் கடத்திய 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 24 Jun 2021 8:48 PM IST (Updated: 24 Jun 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுபானம் வாங்கிக்கொண்டு வாகனங்களில் கடத்திச்செல்வதாக போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு புகார் வந்தது.

 இதையடுத்து மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார், ஆர்.எம். காலனி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது காரின் இருக்கைக்கு அடியில் ஒரு பை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை போலீசார் பார்த்தனர். பின்னர் அந்த பையை எடுத்து பார்த்த போது அதில் 150 மதுபான பாட்டில்கள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. 

இதையடுத்து காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மனோகர் (வயது 60), முருகன் (55), மணிகண்டன் (29) என்பதும், திண்டுக்கல்லில் மதுபானம் வாங்கிக்கொண்டு திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு கடத்திச்சென்று விற்க முயன்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story