கம்ப்யூட்டர் திருடிய 2 வாலிபர்கள் கைது
தி்ண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் மாநகராட்சி நூற்றாண்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் கடந்த சில மாதங்களாக பள்ளி செயல்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் பேட்டரிகளை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் திண்டுக்கல் மேற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பள்ளிக்குள் புகுந்து கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் உபகரணங்களை திருடியது கோவிந்தாபுரத்தை சேர்ந்த ஜோசப் மகன் சந்தோஷ் (வயது 19), ஆறுமுகம் மகன் சிவசங்கரன் (20), குமரேசன் மகன் ஜெயப்பிரகாஷ் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சந்தோஷ், சிவசங்கரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர், மடிக்கணினி, பேட்டரிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெயப்பிரகாசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story