கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு


கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Jun 2021 9:22 PM IST (Updated: 24 Jun 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.


திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 571 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நத்தத்தை சேர்ந்த 70 வயது முதியவர், திண்டுக்கல்லை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், வேடசந்தூரை சேர்ந்த 69 வயது முதியவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த 3 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். எனவே கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 574 உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 331 ஆனது. அதேநேரம் 110 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அந்த வகையில் இதுவரை 30 ஆயிரத்து 375 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 362 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



Next Story