கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2021 9:56 PM IST (Updated: 24 Jun 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி யூனியன் மூப்பன்பட்டியில் கண்மாய்களை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி, யூனியன் அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவி தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி;
கோவில்பட்டி யூனியன் மூப்பன்பட்டியில் கண்மாய்களை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி, யூனியன் அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவி தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு மூப்பன்பட்டி பஞ்சாயத்து தலைவி லிங்கேஸ்வரி கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், யூனியன் மேலாளர் முத்துப்பாண்டியனிடம் மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கண்மாய்களை தூர்வார...
கோவில்பட்டி யூனியன் மூப்பன்பட்டி கிராமத்தில் விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கால் பஞ்சாயத்து வருமானம் குறைந்துள்ளது. நலிவடைந்த மக்கள் வாழும் பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன. இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பஞ்சாயத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். கிராமத்தில் பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியையும், திருமங்கை நகர் கூடத்தையும் பழுது பார்க்க வேண்டும். தெருக்களில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய கம்பங்களை அமைக்க வேண்டும்.
கோவில்பட்டி நகரில் உள்ள கழிவுநீர் மூப்பன்பட்டி செவல்குளம், வேப்பங்குளம் கண்மாய்களில் கலக்கிறது. கோவில்பட்டி நகரில் இருந்து கண்மாய்களுக்கு வரும் கழிவுநீரை சுத்திகரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கண்மாய்களை தூர்வாரி கரைகளையும், மதகுகளையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

Next Story