சாத்தான்குளம் அருகே பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
சாத்தான்குளம் அருகே மின்தடையை கண்டித்து கிராம மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே மின்தடையை கண்டித்து கிராம மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மின்தடை
சாத்தான்குளம் ஒன்றியம் செட்டிக்குளத்தில் அதிக மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் வீடுகளில் ஏற்படும் மின் பழுதை சீரமைக்க கிராமத்தில் மின் பணியாளர்கள் இல்லாததால் மிகுந்த சிரமம் கொள்வதாகவும் தெரிவித்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
இந்நிலையில் நேற்று மாலை 4மணிக்கு தொடங்கிய மின்தடை இரவாகியும் சீராகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இரவில் பேய்க்குளம் செல்லும் சாலையில் அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக ஒயர்மேன், உதவியாளர் நியமிக்க வேண்டும். மின்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என தெரிவித்து மெழுகு வர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு மின்சாரம் சீரானது.
இதையடுத்து தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் அவர் மின்வாரிய அதிகாரிகளிடம் செல்லிடபேசியில் பேசியதை அடுத்து மின் அதிகாரிகள் நாளை(வெள்ளிக்கிழமை) காலையில் வந்து உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதை அறிந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story