கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு, தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப் பாட்டத்தில் இளையரச னேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், துணை ஒருங்கிணைப்பாளர் கற்பூராஜ், பாண்டி, கனகராஜ் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந் தத்திடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இளையர னேந்தல் பிர்காவை சேர்ந்த 12 பஞ்சாயத்துக் களை, நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து 2008- ஆம் ஆண்டு கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. ஆனால், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் கோவில்பட்டி யூனியன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து எல்லைக்குள் அந்த பஞ்சாயத்துகளை இணைக் காமல் காலம் கடத்தி வருகின்றனர். இதனால் கிராம மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைவரும் கடும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி இணைப்பு நடவடிக்கை செய்ய வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story