தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு படை மாணவர்களுக்கு பாராட்டு


தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு படை மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 24 Jun 2021 10:18 PM IST (Updated: 24 Jun 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு படை மாணவர்களை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு ஜெய்க்குமார் பரிசு வழங்கினார்

தூத்துக்குடி:
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது போலீசார் அனைவரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரத்தில் போலீசாருக்கு உதவியாக தூத்துக்குடியில் உள்ள போக்குவரத்து சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு படையில் தன்னார்வலர்களாக உள்ள மாணவர்கள் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு பணியாற்றினர். அவ்வாறு சிறப்பாக பணியாற்றிய மாணவர்கள் 18 பேருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, மாவட்ட தலைமை போக்குவரத்து காப்பாளர் ஜட்சன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story