குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகரில் உள்ள மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ருத்ரசேகர் மகன் சதீஷ்குமார் மற்றும் ராமன் மகன் கார்த்திக் ஆகியோர் தலைமையில் பலர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் நகரில் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு நலச்சங்கம் உருவாக்கப்பட்டு 144 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் இறந்தவர்களின் கையெழுத்துக்களை போலியாக போட்டு சங்கத்தை அறக்கட்டளையாக மாற்றி ரூ.9 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் 3 பேர் கைதாகினர். மீதம் உள்ளவர்கள் தலைமறைவான நிலையில் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் ஜாமீனில் வெளியில் வந்தவர்களே தொடர்ந்து பள்ளியை நிர்வாகம் செய்து பள்ளி கல்வி கட்டணம் உள்ளிட்டவைகளை மோசடி செய்து வருகின்றனர். எனவே, இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இதில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story