ஜவுளி கடைகளுக்கு அபராதம்
ஜவுளி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தளவாய்புரம்
செட்டியார்பட்டி, சேத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக ஜவுளிக்கடைகள் மறைமுகமாக செயல்பட்டு வருவதாக ராஜபாளையம் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் நேற்று பகல் செட்டியார்பட்டி, சேத்தூர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஊரடங்கு தடையை மீறி செட்டியார்பட்டி பகுதியில் மறைமுகமாக செயல்பட்ட ஒரு ஜவுளி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செட்டியார்பட்டி பகுதியில் 3 ஜவுளி கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் சேத்தூர் பகுதியில் மறைமுகமாக செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் தடையை மீறி கடைகளை திறந்தால் இந்த கடைகள் சீல் வைக்கப்படும் என இவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story