மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மல்லி, ஆலங்குளம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.


மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மல்லி, ஆலங்குளம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
x
தினத்தந்தி 24 Jun 2021 10:25 PM IST (Updated: 24 Jun 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

மல்லி, ஆலங்குளம் பகுதியில் இன்று மின்தடை

ராஜபாளையம்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மல்லி, ஆலங்குளம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
ஆலங்குளம்
ராஜபாளையம் மின்கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக ஆலங்குளம் சிமெண்டு ஆலை, சங்கரமூர்த்திபட்டி, ஆலங்குளம் முக்குரோடு, சுண்டங்குளம், கம்மாபட்டி, ஏ.லட்சுமியாபுரம், கீழாண்மறைநாடு, ராமுதேவன்பட்டி, முத்துசாமிபுரம், காண்டியாபுரம், கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்க்கோட்டை, எட்டக்காப்பட்டி, இ.டி.ரெட்டியப்பட்டி, உப்புபட்டி, மாதாங்கோவில்பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, கொங்கன்குளம், புலிப்பாறைபட்டி, காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, ெரங்கசமுத்திரபட்டி, கான்சாபுரம், மம்சாபுரம், திருவேங்கிடபுரம், ராமன்பட்டி, காளவாசல், நாகம்மாள் நகர், கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளிலும் மற்றும் ரெட்டியபட்டி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் தென்கரை மின்பாதைக்கு உட்பட்ட தென்கரை, ஊஞ்சம்பட்டி, வடமலாபுரம், செந்தட்டியாபுரம், ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் தடைப்படும். 
இந்த தகவலை மின்வாரிய  செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மல்லி, மானகசேரி, சாமிநத்தம், ஈஞ்வார், நடுவப்பட்டி, கார்த்திகைபட்டி, போன்ற பகுதிகளில் மின்சாரம் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.  
மேலும் நாளை(சனிக்கிழமை)ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலுள்ள இந்திராநகர், காதிபோர்டு காலனி, நாச்சியார்பட்டி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சித்தாளம் புத்தூர், அத்திக்குளம் போன்ற பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரி சின்னதுரை தெரிவித்துள்ளார்.
வச்சக்காரப்பட்டி
விருதுநகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சின்னமூப்பன்பட்டி, சிவஞானபுரம், வடமலைக்குறிச்சி, மீனாட்சிபுரம், பாவாலி, கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். 
இதேபோன்று துலுக்கப்பட்டி மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் எட்டிநாயக்கன்பட்டி, பட்டம்புதூர், வச்சக்காரப்பட்டி, இனாம் ரெட்டியபட்டி, வீரகுடும்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மேலும் ஜி.என்.பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் குடிநீர் வினியோக பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Next Story