கொரோனாவுக்கு ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் இறந்தார். மேலும் விழுப்புரத்தில் 94 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 41,949 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 326 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 40,760 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,043 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 204 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 40,964 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 753 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 26 ஆயிரத்து 248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 ஆயிரத்து 875 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 190 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயதுடைய ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் நேற்று 700 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 116 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story