போக்குவரத்து நெரிசலில் திணறும் ஆத்துப்பாலம் பகுதி


போக்குவரத்து நெரிசலில் திணறும் ஆத்துப்பாலம் பகுதி
x
போக்குவரத்து நெரிசலில் திணறும் ஆத்துப்பாலம் பகுதி
தினத்தந்தி 24 Jun 2021 10:53 PM IST (Updated: 24 Jun 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நெரிசலில் திணறும் ஆத்துப்பாலம் பகுதி

கோவை

கோவை உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக பொள்ளாச்சி, குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். 

இது தவிர கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலையில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படும். 

எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சாலையில் 1.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதில் முதற்கட்டமாக ரூ.216 கோடி செலவில் உக்கடம் பஸ் நிலையம் அருகே தொடங்கி கரும்புகடை வரை மேம்பாலம் கட் டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

3 ஆண் டுகளை கடந்த நிலையில் இந்த மேம்பாலம் கட்டும் பணி 70 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்து உள்ளது.  தற்போதுஉக்கடம் பஸ் நிலையம், செல்வபுரம் சாலையில் இறங்குதளம் மற்றும் ஏறுதளம் அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது.


இதனிடையே ரூ.152 கோடி செலவில் கரும்புகடை முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆத்துப்பாலத்தில் இருந்த சுங்கச்சாவடி எடுக்கப்பட்டு, அந்த இடத்தில் மேம்பாலத்திற்கு தூண்கள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. 


இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். தினந்தோறும் நெரிசலால் வாகன ஓட்டிகள் சிக்கி திணறும் நிலை உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கோவையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் உக்கடம்-ஆத்துப்பாலம் சாலையில் பயணிக்கின்றன. 

இந்த சாலையில் மேம்பாலத்திற்காக தூண்கள் அமைக்க ராட்சத எந்திரங்கள் மூலம் பிரமாண்ட குழிகள் தோண்டப்படுகிறது. இதற்காக அந்த பகுதியில் சாலையோரம் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஆத்துப்பாலம் முதல் உக்கடம் பெரிய குளக்கரை வரை காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன நெரிசலில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் இடையே தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு இங்கு வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story