நீடாமங்கலத்தில் ெரயில்வே கேட் மூடல்
சரக்கு ெரயில் என்ஜின் திசைமாற்றும் பணி காரணமாக நீடாமங்கலத்தில் ெரயில்வே கேட் மூடப்பட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
சரக்கு ரயில் என்ஜின் திசைமாற்றும் பணி காரணமாக நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. .
சரக்கு ரெயில் என்ஜின் திசைமாற்றும் பணி
நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு காலிப்பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் வருகைக்காக ரயில்வே கேட் நேற்று அதிகாலை 4.55 மணிக்கு மூடப்பட்டது. தொடர்ந்து சரக்கு ரயில் காலிப்பெட்டிகளுடன் நிலையத்திற்குள் 5 மணியளவில் வந்தது. சரக்கு ரயில் என்ஜின் திசைமாற்றும் பணி நடந்தது.
அப்போது என்ஜினை திசை மாற்றி கார்டு பெட்டியை சரக்கு ரயிலில் இருந்து பிரித்து 3-வது நடைமேடை பகுதியில் நிறுத்தினர். பின்னர் சரக்கு ரயில் பெட்டியுடன் என்ஜின் இணைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 6.05 மணிக்கு சரக்கு ரயில் காலிப்பெட்டிகளுடன் மன்னார்குடி புறப்பட்டு சென்றது. பின்னர் ரயில்வே கேட் திறக்கப்பட்டது.
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
சரக்கு ரயில் என்ஜின் திசை மாற்றும் பணிக்காக ெரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் லாரிகள் உள்ளிட்ட நெடுஞ்சாலை போக்குவரத்து வாகனங்கள் 1 மணி நேரம் சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அப்போது உள்ளூர் மக்களும் ரயில்வே கேட் சாலையை கடக்க முடியாமல் காத்திருந்தனர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தநிலையை போக்கிட மாற்று வழிப்பாதை திட்டங்களான நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தஞ்சை முதல் நாகப்பட்டினம் வரையிலான இருவழிச்சாலை திட்ட பணியை துரிதப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story