மதுவில் சானிடைசர் கலந்து குடித்த வாலிபர் சாவு


மதுவில் சானிடைசர் கலந்து குடித்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 24 Jun 2021 11:09 PM IST (Updated: 24 Jun 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

மதுவில் சானிடைசர் கலந்து குடித்த வாலிபர் சாவு

அரக்கோணம்

அரக்கோணம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் மகேஷ் (வயது 35). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுவில் சானிடைசர் கலந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Next Story