பாடந்தொரை பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி
பாடந்தொரை பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் பாடந்தொரை ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதேபோல ஆலவயல் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆற்றுவாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் ஊருக்குள் வெள்ளம் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை பகுதியில் உள்ள ஆற்றுவாய்க்கால்களை தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
இதையொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலுக்குள் குவிந்து கிடந்த சேறும் சகதியும் மற்றும் மண் குவியல்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இப்பணியை பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் பார்வையிட்டார்.
தொடர்ந்து ஆலவயல் பகுதியில் தண்ணீர் புகுந்த வீடுகளை பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வாய்க்கால் அகலம் குறைவாக உள்ளதால் ஊருக்குள் தண்ணீர் வருவதாக புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story