தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி


தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 24 Jun 2021 11:26 PM IST (Updated: 24 Jun 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
107 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தொற்று கண்டறியப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
3 பேர் பலி
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 955 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 185 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மேலும் 107 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 874 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 197 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 854 ஆகும்.

Next Story