திருப்பத்தூர் மாவட்டத்தில் 1¼ லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 1¼ லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள்
x
தினத்தந்தி 24 Jun 2021 11:30 PM IST (Updated: 24 Jun 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவ, மாணவிகள் 1¼ லட்சம் பேருக்கு விலையில்லா பாட புத்தகங்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கி தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

விலையில்லா பாட புத்தகம்

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. ஆனாலும் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடபுத்தகம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பள்ளிகள் வாரியாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை திருப்பத்தூர் மீனாட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்து பேசினார்.

1¼ லட்சம் பேருக்கு...

திருப்பத்தூர் மாவட்டத்தில் 799 அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் மூலம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 138 மாணவ மாணவிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட உள்ளது.

Next Story