வால்பாறையில் மழை சோலையார் அணை நீர்மட்டம் 105 அடியாக உயர்வு
வால்பாறையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், சோலையார் அணை நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்து உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், சோலையார் அணை நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்து உள்ளது.
சோலையார் அணை
வால்பாறை பகுதியில் கடந்த 3-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. சில நேரத்தில் விட்டு விட்டு கனமழையும், லேசான மழையும் பெய்து வருகிறது.
இதன் காரணமாக பி.ஏ.பி. திட்டத்துக்கு முக்கிய அணையாக உள்ள சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 160 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது.
தற்போது அணையின் நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்து உள்ளது. வால்பாறை பகுதியில் ஒருசில இடங்களில் லேசாக மழை பெய்தது.
105 அடியாக உயர்வு
இதன் காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த அணைக்கு வினாடிக்கு 807 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக் கிறது.
அணையின் நீர்மட்டம் 105.36 அடியாக உயர்ந்து உள்ளதுடன், அணையில் இருந்து 115 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளதால், தண்ணீர் இல்லாமல் வறண்டு மணல் திட்டுகளாக காட்சியளித்த பகுதியில் தற்போது தண்ணீர் தேங்கி வருகிறது.
மழையளவு
வால்பாறை பகுதியில் பெய்த மழையளவு (மி.மீட்டர்) விவரம் வருமாறு:-
வால்பாறை 3 மி.மீ., மேல்நீராறு 2, கீழ்நீராறு 4, சோலையார் அணை 11 என பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story