கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் உள்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியை சேர்ந்த 26 வயது ஆண் மற்றும் 69 வயது முதியவர் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 213 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 181 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 ஆயிரத்து 681 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 1,208 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 292 ஆக உள்ளது.
Related Tags :
Next Story