ஆசிரியராக மாறிய திருப்பத்தூர் கலெக்டர்


ஆசிரியராக மாறிய திருப்பத்தூர் கலெக்டர்
x
தினத்தந்தி 24 Jun 2021 11:47 PM IST (Updated: 24 Jun 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியராக மாறிய திருப்பத்தூர் கலெக்டர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்துகொண்டு பாடபுத்தகங்களை வழங்கினார். 
 அப்போது அவர் கணித பாடத்தில் இருந்து போர்டில் கேள்வியை எழுதினார். அதற்கு பிளஸ்-2 மாணவிகள் விடை சொன்னால் பரிசு அளிக்கப்படும் என கூறினார். ஆனால் மாணவிகள் யாருக்கும் விடை தெரியாததால் அவரே விடை எழுதி விளக்கமாக கூறினார்.

 மீண்டும் புத்தகத்தை பார்த்து அதில் உள்ள கணித கேள்வியை கேட்டார். அதற்கும் மாணவிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. உடனடியாக அவரே ஆசிரியராக மாறி பாடங்களை நடத்தினார். முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், கல்வி அலுவலர் மணிமேகலை, பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர்கள் தாமோதரன், தனசேகரன் உள்பட வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி லைமை ஆசிரியர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story