பரமத்திவேலூர் பகுதியில் ஊரடங்கை மீறி திறந்திருந்த 16 கடைகளுக்கு ‘சீல்’-ரூ.45 ஆயிரம் அபராதம்


பரமத்திவேலூர் பகுதியில் ஊரடங்கை மீறி திறந்திருந்த 16 கடைகளுக்கு ‘சீல்’-ரூ.45 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 24 Jun 2021 11:58 PM IST (Updated: 24 Jun 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் பகுதியில் ஊரடங்கை மீறி திறந்திருந்த 16 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கின் போது காய்கறி, இறைச்சி, மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதியில்லை.
இந்தநிலையில் பரமத்திவேலூர், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா கால ஊரடங்கை மீறி கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடைபெறுவதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்குக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவல்லி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ஷோபனா, மோகன் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.
16 கடைகளுக்கு சீல்
அப்போது அரசின் ஊரடங்கு விதிகளை மீறி 2 தனியார் நிதி நிறுவனங்கள், ஒரு டீக்கடை உள்ளிட்ட 16 கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறையினர் அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அதன் உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகள் திறந்தாலோ, முககவசம் அணியாமலோ வெளியே சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story