கொரோனா பரவல் குறித்து போலீசார் விழிப்புணர்வு


கொரோனா பரவல் குறித்து போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 25 Jun 2021 12:21 AM IST (Updated: 25 Jun 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

அரவக்குறிச்சி
கரூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில், அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கிராமப்பகுதிகளில் அரவக்குறிச்சி போலீசார் நேரடியாக சென்று கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போலீசார், பொதுமக்களிடம் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும்  என எடுத்துக்கூறினர்.

Next Story