கோவில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்:செயல் அலுவலர் இடமாற்றம்


கோவில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்:செயல் அலுவலர் இடமாற்றம்
x
தினத்தந்தி 24 Jun 2021 7:01 PM GMT (Updated: 24 Jun 2021 7:01 PM GMT)

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக செயல் அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை இணை ஆணையாளர் அதிரடியாக பிறப்பித்து உள்ளார்.

சிவகங்கை,

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக செயல் அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை இணை ஆணையாளர் அதிரடியாக பிறப்பித்து உள்ளார்.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

சிவகங்கையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கவுரிபிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் மீட்டனர். மேலும் அங்கு ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர். மீட்கப்பட்ட நிலம் பல கோடி ரூபாய் மதிப்பு மிக்கது.
இந்த நிலையி்ல் இந்துசமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

செயல் அலுவலர் இடமாற்றம்

இது தொடர்பாக கோவில் நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரி சிவகங்கை நகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் காரைக்குடி கொப்படையம்மன் கோவில் நிர்வாக அதிகாரி இருந்த ஞானசேகரன் சிவகங்கை கவுரிபிள்ளையார் கோவில் நிர்வாக அதிகாரியாகவும் ஏற்கனவே இங்கு செயல்அலுவலராக பணியாற்றிய நாகராஜனை காரைக்குடி கோவிலுக்கும் இடமாற்றம் செய்து  இணை ஆணையாளர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டார்.

Next Story