இன்று, நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று, நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 25 Jun 2021 12:35 AM IST (Updated: 25 Jun 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

இன்று, நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்:
திருச்செங்கோடு மின் கோட்டத்திற்குட்பட்ட உஞ்சனை, இளநகர் துணை மின் நிலையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை உஞ்சனை, குமரமங்கலம், ராயர்பாளையம், சடைய கவுண்டம்பாளையம், ஆலாங்காட்டுப்புத்தூர், சத்திய நாய்க்கன்பாளையம், மண்டகப்பாளையம், 85-கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரம்பாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், கோலாரம், கரிச்சிபாளையம் மற்றும் வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, நொண்டிச்பட்டி, செக்குப்பட்டி, எளையம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரியமணலி, கோக்கலை, மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
இறையமங்கலம், ஆனங்கூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஏ.என்.பாளையம், கொக்கராயன்பேட்டை, காடச்சநல்லூர், குப்பிச்சிபாளையம், வேலாத்தாகோயில், டி.ஜி.பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
முசிறி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னங்கல்புதூர், கொட்டாம்பட்டி, நாய்கடிபுதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசபாளையம், மாரப்பநாய்க்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கிபாளையம், புத்தூர், வேப்பமரத்துபுத்தூர், மணிக்கட்டிபுத்தூர், கணக்கம்பாளையம், சிங்கிலிபட்டி, பொம்மம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிப்பாளையம், சின்னதளிகை, தட்டராபாளையம், சுப்பநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
சோழசிராமணி துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளான சோழசிராமணி, சுள்ளிபாளையம், சக்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல்களை செயற்பொறியாளர்கள் பானுமதி, ராணி, வாசுதேவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Next Story