எருமப்பட்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
எருமப்பட்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 80). இவர் தனது மனைவி செல்லம்மாளுடன் வசித்து வந்தார். முதியவர் பரமசிவம் உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை செல்லம்மாள் வெளியே சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த பரமசிவம் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story