பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது


பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2021 12:56 AM IST (Updated: 25 Jun 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே வீட்டின் பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செந்துறை:

பூந்தொட்டியில் கஞ்சா செடி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 25). இவரது வீட்டின் பின்புறம் குளிக்கும் இடத்தில் தகரம் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில், பிளாஸ்டிக் குடத்தை வெட்டி பூந்தொட்டி போன்று மாற்றி, அதில் ஒரு கஞ்சா செடியை வைத்து வீரமணி வளர்த்துள்ளார். 
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் வீரமணி வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் கஞ்சா செடி வளர்த்தது, தெரியவந்தது. சுமார் 5 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள அந்த செடி, 4 மாத‌மாக வளர்க்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
வாலிபர் கைது 
போலீசாரின் விசாரணையின்போது, அது மூலிகை செடி என்று வீரமணி கூறியுள்ளார். ஆனால் அது கஞ்சா செடி என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த செடி எங்கு கிடைத்தது, யாரிடம் அதை வாங்கினார் என்பது குறித்து வீரமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
பின்னர் பூந்தொட்டியுடன் கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். இதையடுத்து அவரை செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story