இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 2021-22-ம் நிதி ஆண்டிற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்ற மகளிர் ஆகியோருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாசில்தாரிடம் இருந்து பெற்ற அசல் குடும்ப ஆண்டு வருமான சான்று (ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்), இருப்பிட சான்று அல்லது குடும்ப அட்டை நகல், குறைந்தபட்சம் ஆறு மாத கால தையல் பயிற்சி பெற்ற சான்றின் நகல், வயதுக்கான சான்று (20 முதல் 40 வயது வரை), சாதி சான்று நகல், ஆதார் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட்டு அளவுள்ள புகைப்படங்கள் மற்றும் முன்னுரிமை கோருவதற்கு சான்றுகள் இருப்பின், அதன் நகல் ஆகியவைகளுடன் விண்ணப்பத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் அறை எண் 20-ல் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story