2 குழந்தைகளின் தாய், பாம்பு கடித்து சாவு
2 குழந்தைகளின் தாய், பாம்பு கடித்து இறந்தார்.
மங்களமேடு:
அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரம்யா(25). இவர்களுக்கு 2 வயதிலும், பிறந்து இரண்டு மாதமே ஆன நிலையிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக தனது வீட்டில் இருந்த சாக்கு ஒன்றை ரம்யா எடுத்துள்ளார். அப்போது சாக்கில் இருந்த பாம்பு, ரம்யாவை கடித்தது. இதனால் அலறிய ரம்யாவை, அவரது உறவினர்கள் மீட்டு லப்பைக்குடிகாட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா இறந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story