திருச்சி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்


திருச்சி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
x
தினத்தந்தி 25 Jun 2021 1:05 AM IST (Updated: 25 Jun 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருச்சி,

திருச்சியில் நகரியம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதை அருகில் உள்ள மரம் வெட்டும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே கம்பரசம்பேட்டை தெற்குதெரு, பெரியார்நகர், அக்ரஹாரம், வெள்ளாந்துறை, சீனிவாசநகர், தமிழன்நகர், காஜாபேட்டை, தலைமை தபால் நிலைய பகுதி, குட்ஷெட்ரோடு, மேலப்புதூர், ராக்கின்ஸ்ரோடு, ஸ்டேட் வங்கி மெயின் கிளை பகுதி, முதலியார் சத்திரம், கூனிபஜார், கலைக்காவிரி ரோடு, வில்லியம்ஸ் ரோடு, கேம்பியன்பள்ளிரோடு, அகில இந்திய வானொலி நிலையம்ரோடு, தென்னூர்ஹைரோடு, சின்னசாமிநகர், ஆழ்வார்தோப்பு, சிவப்பிரகாசம்சாலை, தென்னூர் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று மின்வாரிய திருச்சி நகரிய செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

வையம்பட்டி துணை மின்நிலையத்தில் பொன்னம்பலம்பட்டி மின்பாதைக்குட்பட்ட சடையம்பட்டி, தொப்பநாயக்கன்பட்டி, குமாரவாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, அம்மாபட்டி ஆகிய பகுதிகளிலும், மணப்பாறை துணை மின்நிலையத்தில் மொண்டிப்பட்டி மின்பாதைக்குட்பட்ட கே.உடையாபட்டி, மொண்டிப்பட்டி, பூங்குடிப்பட்டி, போடுவார்பட்டி, கே.பெரியபட்டி, இடையபட்டி, சமுத்திரம், மரவனூர், சின்னசமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்காரன்பட்டி, வடக்கு சேர்பட்டி, தெற்குசேர்பட்டி, குழவாய்பட்டி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளிலும், பன்னாங்கொம்பு துணை மின்நிலையத்தில் பாலக்கருதம்பட்டி, பொய்கைப்பட்டி, கல்பாளைத்தான்பட்டி, ராயம்பட்டி, வடுகபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பன்னாங்கொம்பு, ஈச்சம்பட்டி, பின்னத்தூர், பெருமாம்பட்டி, அமயபுரம், பண்ணபட்டி, தாதமலைப்பட்டி ஆகிய பகுதிகளில் அவசர கால பராமறிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி சக்ரா கார்டன், கீழ அடையவளஞ்சான், கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, பூக்கடை, வசந்தம் நகர், சக்தி நகர், ராஜகோபால் நகர் ஆர். எஸ். ரோடு, கன்னியப்பன் தெரு, மேட்டுத்தெரு, தாமோதரன் கிருஷ்ணன் தெரு. வடக்கு தேவி தெரு, மங்கம்மா நகர், சுதர்சன் நகர், ராகவேந்திரபுரம், சரஸ்வதி கார்டன், புதுதெரு, அம்மாமண்டபம் ரோடு, புஷ்பக் நகர், கீதபுரம், சங்கர் நகர், மலையப்ப நகர் மற்றும் சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஈச்சம்பட்டி பம்ப் ஹவுஸ், தாளக்குடி பம்ப் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் தடைபடுகிறது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் மின் செயற்பொறியாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Next Story