திருப்பூர் மாவட்டத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால் திருப்பூர் மாவட்டத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசியை அரசிடமிருந்து பெற்று அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால் திருப்பூர் மாவட்டத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசியை அரசிடமிருந்து பெற்று அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தடுப்பூசி
திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கநிர்வாகிகள் சேகர் (ஏ.ஐ.டி.யு.சி.), ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), ரங்கசாமி, சரவணன் (தொ.மு.ச.), சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி (எச்.எம்.எஸ்.), மனோகர் (எம்.எல்.எப்.)உள்ளிட்டவர்கள் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்அமீதுவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் முறைகேடுகள் ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருப்பூரில் வாக்காளராக இல்லாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் வசிக்கிறார்கள்.
தொழில் நகரம் என்பதால் வெளிமாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள் என்பதை அரசுக்கு எடுத்துக்கூறி திருப்பூர் மாவட்டத்துக்கு கூடுதலான தடுப்பூசிகளை கேட்டுப்பெற்று அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
தொழிற்சாலை நிர்வாகம்
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சுழற்சி முறையில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். தடுப்பூசி போடும் விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். நிபந்தனைகள் அடிப்படையில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை நிர்வாகங்கள் பொறுப்பில் ஒரு மாதத்துக்குள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் தடுப்பூசி போடுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story