தென்காசியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி


தென்காசியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 25 Jun 2021 1:50 AM IST (Updated: 25 Jun 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் கொரோனாவுக்கு நேற்று 4 பேர் பலியானார்கள்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 400 ஆக உள்ளது. 25 ஆயிரத்து 541 பேர் குணமடைந்து உள்ளனர். 401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 52 வயது, 69 வயது மற்றும் 70 வயது பெண்கள் மற்றும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 53 ஆண் என மொத்தம் 4 பேர் பலியானார்கள். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 458 ஆக உள்ளது.  

Next Story