கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 25 Jun 2021 2:01 AM IST (Updated: 25 Jun 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்குடியில் புதியதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடி உட்கோட்ட காவல் துறையின் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக டி.வினோஜி பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்கள் 24 மணி நேரமும் காவல் துறை சம்பந்தமான தங்கள் குறைகளை, தேவைகளை என்னிடம் தெரிவிக்கலாம்.உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், கட்டப்பஞ்சாயத்து செய்வோர், நில அபகரிப்பு மோசடியில் ஈடுபடுவோர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். குற்ற சம்பவங்கள் நிகழாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். சாலை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், ஒழுங்கு படுத்தவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.




Next Story