கொரோனா நோயாளி தற்கொலை


கொரோனா நோயாளி தற்கொலை
x
தினத்தந்தி 25 Jun 2021 2:10 AM IST (Updated: 25 Jun 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆட்டையாம்பட்டி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று ஏற்பட்டதால், கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தறித்தொழிலாளி
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் கார்த்திேகயன் (வயது 35). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி பவித்ரா (30) என்ற மனைவியும், 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கார்த்திகேயன் மற்றும் அவரது தாயார் கண்மணி (60) ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்கொலை
இந்த நிலையில் கார்த்திகேயனின் மனைவிக்கு தொற்று ஏற்பட்டதால், அவர் இளம்பிள்ளையில் உள்ள தனது தாயார் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது அண்ணன் பூபதி கண்ணன் (40) என்பவருக்கும் தொற்று ஏற்பட்டதால், அவர் உத்தமசோழபுரம் வேளாண்மை கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது குடும்பத்தில் தன்னுடன் சேர்த்து 4 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதே என்று கார்த்திகேயன் மனவேதனை அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் கொரோனா தொற்று குணமாகாத நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விசாரணை
இதுகுறித்து எஸ்.பாப்பாரப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் இன்ஸ்பெக்டர் சசிகலா (பொறுப்பு) மற்றும் போலீசார் விரைந்து வந்து கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஆட்டையாம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story