நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி 1997-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை வாயிலாக தொடங்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு அலுவலர் குடியிருப்பில் உள்ள கலைபண்பாட்டு மைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த இசைப்பள்ளியில் படிப்பதற்கு மாணவ- மாணவிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் முழுநேரமாக படிக்க வேண்டும். முதலாம் ஆண்டுக்கு ரூ.152, 2-ம், 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.120 மட்டும் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வசதி, ரெயில் கட்டண சலுகை வசதி, அரசு மாணவர் விடுதி, மாதந்தோறும் மாணவர்களுக்கு தலா ரூ.400 கல்வி உதவித்தொகை மற்றும் இலவச சீருடை, இலவச சைக்கிள் மற்றும் இலவச காலணி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு 3 ஆண்டுகள் படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்கத்தால் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சான்றிதழை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகளிலும், இந்து அறநிலையத்துறை கோவில்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மாணவ-மாணவிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து இசை ஆசிரியராகவும், கலை வல்லுனர்களாகவும் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களுக்கு 04622900926, 9443810926 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story