நடனமாடி மனு கொடுத்த திருநங்கைகள்
பாளையங்கோட்டையில் உள்ள தமிழ் கலை பண்பாட்டு மையத்துக்கு வந்த திருநங்கைகள் நடனமாடி கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசு விதித்துள்ள தடையால் கலைத்துறையைச் சேர்ந்த கலைஞர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டும் தடை நீடித்து வருகிறது.
எனவே தமிழக அரசு உடனடியாக விதிகளுக்கு உட்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். மேலும் அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெறுவதற்கு திருநங்கை கலைஞர்களுக்கான அடையாள அட்டையை வழங்க ேவண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தமிழ் கலை பண்பாட்டு மையத்துக்கு நேற்று திருநங்கைகள் கலைக்குழுவினர் வந்தனர்.
அவர்கள் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் பாடி நடனமாடி மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருநங்கைகள் மட்டுமல்லாமல் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசு நிகழ்ச்சிகளில் திருநங்கை குழுவினரை பயன்படுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருந்தனர்.
Related Tags :
Next Story