இலங்கை அகதிகள் முகாமில் குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆய்வு


இலங்கை அகதிகள் முகாமில் குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Jun 2021 2:53 AM IST (Updated: 25 Jun 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆய்வு செய்தார்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் தற்போது 9 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்த குழந்தைகளுக்கான வசதிகள் குறித்தும், அரசின் உதவிகள், கல்வி வசதிகள் குறித்தும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ராமராஜ் ஆய்வு நடத்தினார். முகாமில் தங்கியிருப்பவர்களை அழைத்து விவரம் கேட்டறிந்தார்.

அப்போது 2 வயதுள்ள ஒரு குழந்தைக்கு பிறப்புச்சான்று பெறப்படவில்லை என்று தெரிவித்தனர். அதை தாலுகா அலுவலகம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தினார்.  இந்த ஆய்வின்போது குழந்தைகள் நல அலுவலர் சந்திரகலா, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஆணைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, துணை தாசில்தார் பிரஷ்ராஜன், கல்லூரணி வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடையம் அருகேயுள்ள மாதாபுரம், பிள்ளையார்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகள் காணப்படுகின்றன. இங்கு உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். இந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இப்பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர். 

அந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முறையான உணவு வழங்கப்படுகிறதா? அவர்கள் எவ்வாறு படிக்கிறார்கள்? அவர்களின் பெற்றோர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்பது குறித்து குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் ஆய்வு மேற்கொண்டார். 

Next Story