செங்கோட்டையில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா


செங்கோட்டையில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Jun 2021 3:12 AM IST (Updated: 25 Jun 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் 45-க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் செங்கோட்டை நகராட்சி பகுதியில் மேல அரசாழ்வார் தெருவில் (5-வது வார்டு) 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து தெருவுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் நித்தியா, சுகாதார அலுவலர் வெங்கடேசன், இலத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழ்செல்வி, நகர்நல மைய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் அனுகிருத்திகா மற்றும் அலுவலர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் சுகாதாரப்பணியாளர்கள் அந்த பகுதிக்கு சென்று தொற்று பரவலை தடுக்கும் வகையில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் இருக்கிறார்களா? என பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதி மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. சுகாதாரப்பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Next Story