‘கோவேக்சின்’ 2-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடு 2 நாட்களுக்கு நீட்டிப்பு
‘கோவேக்சின்’ 2-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடு 2 நாட்களுக்கு நீட்டிப்பு சென்னை மாநகராட்சி தகவல்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாநகராட்சியின் சார்பில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த தவறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக 2-வது தவணை தடுப்பூசி செலுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
‘கோவேக்சின்’ 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு 23 மற்றும் 24-ந்தேதிகளில் மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த 2 நாட்களில் 8 ஆயிரத்து 880 பேர் ‘கோவேக்சின்’ 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி பயனடைந்துள்ளனர்.
தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொள்ள செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு இன்றும்(25-ந்தேதி), நாளையும்(26-ந்தேதி) என மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ‘கோவேக்சின்’ முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களை கடந்த நபர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களுக்கு சென்று 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டு பயனடையுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story