சோழிங்கநல்லூரில் தொழிலாளி குத்திக்கொலை
சோழிங்கநல்லூரில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கணேசன் (வயது 43). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். நேற்று மாலை பொன்னியம்மன் கோவில் அருகே மது போதையில் இருந்த கணேசனுக்கும் அங்கு வந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேசனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கணேசன் இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கணேசனின் உடலை செம்மஞ்சேரி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளியை குத்திக்கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story