செங்கல்பட்டு மாவட்டம் நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு மாவட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியை சேர்ந்தவர் எஸ்.கவுஸ் பாஷா. காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்த இவர் கடந்த மே மாதம் 16-ந்தேதியன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது படத்திறப்பு விழா சிங்கப்பெருமாள் கோவில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் அருகே நடந்தது. இதில் கவுஸ் பாஷா மகன்களான டாக்டர்கள் சாதிக்பாஷா, ஷாக்திர் பாஷா தலைமை தாங்கினார்கள். முன்னாள் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சந்தானகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பலராமன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பென்ஜமின், மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்ட கவுஸ் பாஷா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 15 தையல் எந்திரங்கள், 300 பேருக்கு சேலை, 1000 பேருக்கு அன்னதானங்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயலாளர் சீனிவாசன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் வடகால் மாரி, முன்னாள் நகர்மன்ற தலைவர் கோபி கண்ணன். செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில்குமார், சிங்கப்பெருமாள் கோவில் கூட்டுறவு சங்க தலைவர் குணசேகரன், விஜயபாஸ்கர், வாசுதேவன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story